தமிழக அரசு மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி முன்னுரிமை குடும்ப அட்டதாரர்கள் சுய விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. நியாய விலை கடைகளில் பொருட்கள் விநியோகம் பாதிக்காத விதமாக அந்த பணியை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. இது குறித்து வெளியான அறிக்கையில், தமிழகம் முழுவதும் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் குறித்த விவரங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. அதில் முன்னுரிமை குடும்பங்களை சரி பார்க்க வேண்டும் எனவும் இதற்காக குடும்ப அட்டைதாரர்களின் சுய விவரங்களை பதிவிடவும் மத்திய அரசு சார்பில் இரண்டு முறை நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டது.

இதனை அடுத்து சிறப்பு முகாம்களை ஏற்பாடு செய்து கைவிரல் ரேகை பதிவு மூலமாக பொது விநியோகத் திட்ட பயனாளிகளின் விவரங்களை உறுதி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளுக்கு பொருள் வாங்க வரும்பொழுது சுய விபர குறிப்புகளை ரேஷன் அட்டைதாரர்கள் கொடுக்கலாம். சிறப்பு முகாம் அமைக்காமல் பொருட்களை வாங்க அட்டைதாரர்கள் வரும்போது அவர்களிடம் இருந்து விவரங்களை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.