சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாடு நடைபெற்றது. இதில் பேசிய முதல்வர் ஸ்டாலின், கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருளை ஒழிக்க குற்றவாளிகளை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்.

அமைதியை நிலைநாட்டி குற்றங்களை முன்பே தடுக்கவும் அரசின் திட்டங்கள் அனைவரையும் சென்றடைவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். போகோ வழக்குகளில் உடனடி நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு காவல்துறை மீதும் சட்டத்தின் மீதும் நம்பிக்கை வரும் எனவும் பொய் செய்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.