மெட்டால் நிறுவனத்தின் whatsapp செயலியில் அண்மை காலமாக தொடர்ந்து பல அப்டேட்கள் வந்த வண்ணம் உள்ளது. இந்த அப்டேட்களால் பயனர்களின் தகவல் பரிமாற்றம் மேன்மேலும் எளிதாகி வருகிறது. அந்த வகையில் அண்மையில் வாட்ஸ்அப் சேனல் என்ற புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.  வாட்ஸ் ஆப் செட்டிங்கில் அப்டேட்ஸ் என்பதில் உள்ள + – ஐ கானை கிளிக் செய்து பயனர்கள் சேனலை உருவாக்கலாம். இன்றைக்கு பலரும் வாட்ஸ்அப் சேனலை உருவாக்கி அதில் இணைத்துள்ளனர்.

அந்த வரிசையில் தமிழக முதல்வர் ஸ்டாலின், வாட்ஸ் அப் சேனலை தொடங்கினார். டிஜிட்டல் உலகில் மக்களையும், தொண்டர்களையும் இணைக்கும் பாலம், சோசியல் மீடியா எனக் கருதும் ஸ்டாலின், அதில் எப்போதும் ஆக்டிவாக செயல்படுவார். குறிப்பாக x, பேஸ்புக் பக்கங்களில் கருத்துகளை கூறும் அவர், தற்போது வாட்ஸ் அப் சேனலையும் தொடங்கியுள்ளார். MP தேர்தல் விரைவில் நடக்க உள்ள சூழலில், அரசியல் தலைவர்களின் சமூக வலைதள பயன்பாடு தீவிரமடைந்துள்ளது.