2006 ஆம் வருடம் குழந்தை திருமணம் தடுப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில் தற்போது வரை பல காரணங்களினால் இந்த திருமணம் நடத்தப்பட்டு தான் வருகிறது. இதனை தடுக்கும் விதமாக ஏராளமான நடவடிக்கைகளை அரசு எடுத்து வந்தாலும் குறைந்த பாடில்லை. அந்த வகையில் தற்போது தமிழகத்தில் குழந்தை திருமணம் இல்லாத மாநிலமாக மாற்றிவிடும் விதமாக 38 மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் வரும் அக்டோபர் 15ஆம் தேதி உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பள்ளி மாணவர்களுக்காக குழந்தை திருமணங்களை தடுப்பதற்கான உதவி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏதேனும் வற்புறுத்தலில் குழந்தை திருமணம் நடாந்தால் அந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.