கோவையில் உள்ள பிஎஸ்ஜி கலை அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி நிறுவனர் பேராசிரியர் ஜி.ஆர். தாமோதரனின் பிறந்தநாள் விழாவை பிஎஸ்ஜி குழுமத்தின் பணியாளர்கள் தினமாக கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் கலந்து கொண்டார். இந்த விழா முடிவடைந்த பிறகு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஆளுநர்கள் பிரதமராகும் உள்துறை அமைச்சராலும் பரிசீலனை செய்யப்பட்டு ஜனாதிபதியால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அவர்கள் திறமையை அடையாளம் கண்டு கொள்கிறார்கள்.

ஆனால் தமிழக மக்கள் தான் இன்னும் திறமையை பார்த்து அடையாளம் கண்டு கொள்ளவில்லை. தமிழக மக்கள் மட்டும் என்னை பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்து இருந்தால் இந்நேரம் நான் மந்திரியாகி இருப்பேன். தமிழக மக்கள் எங்களை தேர்ந்தெடுக்காததால் தான் மேலிடம் எங்களை ஆளுநராக ஆக்கியுள்ளது. தமிழக மக்கள் தயவு கூர்ந்து அடையாளம் கண்டு கொள்ளுங்கள். எங்களை போன்றவர்கள் நிர்வாக திறமை வாய்ந்தவர்கள். எனவே தமிழக மக்கள் சிந்தித்து தேர்வு செய்ய வேண்டும் என்றார். மேலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு நான் கட்சியின் தலைவர் கிடையாது அண்ணாமலை தான் கட்சியின் தலைவர் எனவே அவரிடம் அதைப் பற்றி கேளுங்கள் என்று கூறிவிட்டார்.