தமிழகத்தில் ரேஷன் கார்டுகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கான அரிசி, பருப்பு மற்றும் பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசியமான பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. அதன்பிறகு ரேஷன் கார்டுகள் மூலமாக அரசின் பல நல்ல திட்டங்களும் மக்களை சென்றடைகிறது. இந்நிலையில் புதிய ரேஷன் கார்டுகளுக்கு ஜூலை 15ஆம் தேதி நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

அதாவது உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலம் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு 45 நாட்களுக்குள் அதற்கு தீர்வு காண வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனால் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிப்பது உள்ளிட்ட சேவைகளை பெறலாம்.

எனவே புதிய ரேஷன் கார்டு காத்திருப்பவர்கள் இன்று முதல்  நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் அப்படி விண்ணப்பிக்கும் பட்சத்தில் விரைவில் உங்கள் கைகளுக்கு ரேஷன் கார்டுகள் வந்துவிடும்.