முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்த “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ், தமிழக அரசு கட்டுப்பாட்டில் செயல்படும் சாலை போக்குவரத்து நிறுவனமான IRT (Institute of Road Transport) மூலம் பெண்களுக்கு இலவச கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி வழங்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பயிற்சி தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பயிற்சி மையங்களில் நடைபெற உள்ளது. அதாவது, கும்மிடிப்பூண்டி, விழுப்புரம், வேலூர், திருச்சி, கும்பகோணம், காரைக்குடி, புதுக்கோட்டை, சேலம், தருமபுரி, பொள்ளாச்சி, ஈரோடு, திருநெல்வேலி, நாகர்கோவில், மதுரை, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய இடங்களில் பயிற்சி வழங்கப்படும்.
இதில் சேர வேண்டிய தகுதிகள்:
விண்ணப்பதாரர் 20 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.
தமிழில் பேசவும், புரிந்துகொள்ளவும் தெரிய வேண்டும்.
ஏற்கனவே இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
அந்த உரிமம் முதல் ஆண்டை கடந்திருக்க வேண்டும்.
PSV பேட்ஜ் (Public Service Vehicle badge) பதியப்பட்டிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும்போது ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செயல்பாட்டிலிருக்கும் மொபைல் எண் அவசியம்.
பயிற்சி விவரம்:
மொத்தம் 65 வேலை நாட்கள் பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சி முழுமையாக இலவசம் என்பதுடன், வேலைவாய்ப்பு வாய்ப்புகளும் உறுதி செய்யப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
பயிற்சி பெற விரும்புபவர்கள், https://www.tnskill.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று,
“வர்த்தக வாகன ஓட்டுநர் பயிற்சி நிலை 4” என்ற பாடத் திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும்.
அதில் உங்கள் விருப்பமான பயிற்சி மையத்தை தேர்வு செய்து, ஆதார் எண் மற்றும் பிற விவரங்களை பதிவு செய்து விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 20, 2025
தமிழக அரசின் இந்த புதிய முயற்சி, பெண்கள் தொழில் வாய்ப்பை அதிகரிக்கும் முக்கியமான வழியாக கருதப்படுகிறது. வாகன ஓட்டுநர் பணியில் பெண்கள் மிகுந்த நம்பிக்கையுடன் முன்னேற அரசின் இந்த இலவச பயிற்சி திட்டம் உறுதுணையாக இருக்கப்போகிறது.
