இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக அரசு பல அறிவுறுத்தல்களை தொடர்ந்து வழங்கி வருகிறது. அதன்படி இன்றைய காலகட்டத்தில் பண தேவைகளுக்காக பலரும் ஆன்லைன் கடன் செயலி மூலம் கடன் வாங்குகின்றனர். ஆனால் இது போன்ற ஆன்லைன் செயலி மூலம் கடன் வாங்குவது மிகவும் ஆபத்தானது என்ற டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடத்துள்ளார்.

ஆன்லைன் செயலி மூலமாக கடன் பெறும்போது நமது தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் திருடு போக அதிக வாய்ப்பு உள்ளது. இதனால் மக்கள் யாரும் இதனை நம்பி ஏமாற வேண்டாம் என்று தமிழக மக்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு வீடியோ வெளியிட்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.