தமிழகத்தில் 10 , 11, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பொது தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து மூன்று வருடங்கள் பொதுத் தேர்வு நடத்துவதால் மாணவர்கள் அனைவரும் மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும் அதனால் 11ஆம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்ய வேண்டும் எனவும் ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது. இந்நிலையில் 11ஆம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்வது தொடர்பாக அவசர ஆலோசனை கூட்டம் பள்ளி கல்வித்துறையில் தொடங்கியுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இதற்கே தலைமை ஏற்றுகிறார். 11ஆம் வகுப்பை நடத்தாமலேயே சில பள்ளிகள் 12 ஆம் வகுப்பு பாடத்தை நடத்தியதால் 11 ஆம் வகுப்புக்கும் பொது தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது.ஆனால் மாணவர்களுக்கு சுமை அதிகரிப்பதால் தற்போது 11ஆம் வகுப்பு ரத்து குறித்து அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.