தமிழகத்தில் அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பெண்களுக்காக பிரத்தியேகமாக இருக்கைகள் ஒதுக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் இடையில் நேற்று போக்குவரத்து துறை மற்றும் இயக்கூர்திகள் சட்டங்கள் -நிர்வாக துறை தொடர்பான மானிய கோரிக்கை மீது விவாதம் நடந்தது. அதில் பேசிய அமைச்சர் சிவசங்கர் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அரசு விரைவு பேருந்துகளில் (SETC) பெண்களுக்கு நான்கு இருக்கைகள் ஒதுக்கப்படும். அதோடு அனைத்து அரசு பேருந்துகளிலும் சிசிடிவி கேமராக்கள் விரிவாக்கப்படும். அரசு போக்குவரத்து கழக பணி மனைகளில் உள்ள உணவகங்கள் டெண்டர் மூலம் நடத்தப்படுகின்றன. இந்த உணவகங்களை நடத்த மகளிர் சுய உதவிக் குழுக்கள் முன்வந்தால் முன்னுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.