
தமிழகத்தில் சுற்றுலா வளர்ச்சிக்கு உதவும் நபர்களை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்படும் சுற்றுலா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சுற்றுலாத்துறை கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் உலகச் சுற்றுலா தின நிகழ்ச்சியில் சுற்றுலா விருதுகளை வழங்கி வருகிறது.
அதன்படி தமிழ்நாட்டுக்கான சிறந்த சுற்றுலா ஏற்பாட்டாளர் மற்றும் சிறந்த வெளிநாட்டை சுற்றுலா ஏற்பாட்டாளர் என மொத்தம் 17 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து வருகின்ற ஆகஸ்ட் 27ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.