நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே… எந்த ஒரு நாட்டின் வரலாற்றிலேயே ஒரு நேரம் வருகிறது. பழைய பந்தங்களை எல்லாம் உடைத்து புதிய சக்தியோடு உற்சாகத்தோடு – இலக்கோடு முன்னேறுவதற்கான ஒரு நிச்சயம் செய்கிறது. இந்த 21 ஆம் நூற்றாண்டில்… இந்திய ஜனநாயகத்தின் கோயிலில் நான் இதை சொல்கிறேன். இந்த காலகட்டம் இந்தியாவின் ஒவ்வொரு கனவையும் நினைவாக்க வேண்டிய ஒரு காலகட்டம் ஆகும்.

நாம் அனைவரும் அப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில் இருக்கிறோம். நானாக இருக்கட்டும், நாங்களாக இருக்கட்டும், நீங்களாக இருக்கட்டும், எல்லோரும் இந்த காலகட்டத்தில் இருக்கிறோம். இது ஒரு முக்கியமான நேரம். நான் இந்த சொற்களையும் மிகுந்த நம்பிக்கை உடைய தெரிவிக்க விரும்புகிறேன். இந்த காலகட்டம் வருகின்ற ஓர் ஆயிரம் ஆண்டுகள் வரை தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய காலகட்டமாக இருக்கும்.

140 கோடி மக்களின் புருஷாத்மம் இந்த காலகட்டத்தில் தங்களுடைய துணிச்சலால், வீரத்தால்,  தங்களுடைய பலத்தால் அவர்கள் செய்கின்ற செயல்கள் வருகின்ற ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு அடிப்படையை வலிமையாக ஏற்படுத்தப் போகிறது. எனவே தான் இந்த காலகட்டத்தில் நமக்கு மிகப்பெரிய கனவு இருக்கிறது, மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது.  இந்த சமயத்தில் நாம் எல்லோருக்கும் ஒரே ஒரு குறிக்கோள் தான் இருக்க வேண்டும் நாட்டின் வளர்ச்சி.

நாட்டு மக்களுடைய கனவுகளை எல்லாம் நினைவாக்க வேண்டிய ஒரு இலக்கு. அதற்காக மனம் – உடல் – உயிரோடு வேலை செய்ய வேண்டும்.  140 கோடி இந்திய மக்கள்…. இந்த பாரத சமூகத்தின் வலிமை.  நம்மை அந்த உயரத்திற்கு எடுத்துக் கொண்டு செல்லும். நம்முடைய இளைஞர்களின் சக்தி…  உலகம் அவர்களுடைய சக்தியை புரிந்து கொண்டு இருக்கிறது.  நம்முடைய இளைஞர் சமுதாயம் ஒரு கனவை காண்கிறது. அந்த கனவை ஒரு நிச்சயத்தோடு நாம் முடிக்க வேண்டும் என தெரிவித்தார்.