தமிழக அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகலவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 46 சதவீதம் ஆக உள்ள அகலவிலைப்படி 50 சதவீதமாக உயர்கிறது. இந்த உயர்த்தப்பட்ட அகலவிலைப்படி ஜனவரி 1ஆம் தேதி முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும் என்று கூறியுள்ள அரசு இதனால் ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் உட்பட 16 லட்சம் பேர் பயனடைவார்கள் எனவும் அரசுக்கு இதனால் ஆண்டுதோறும் 2588 கோடி கூடுதல் செலவு எனவும் தெரிவித்துள்ளது.