தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் முன்பை விட இப்போது ரத்தமும் சதையுமாக அதிரத் தொடங்கியுள்ளது.
குறிப்பாக, இந்த முறை எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காமல் ‘தொங்கு சட்டசபை’ அமையக்கூடும் என எக்சிட் போல் முடிவுகள் வெளியாகியுள்ளநிலையில், தேர்தலுக்குப் பிந்தைய மெகா கூட்டணியாக அதிமுக – தவெக கைகோர்க்கப் போவதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 4 முதல் 12 இடங்கள் வரை பிடித்து “கிங் மேக்கராக” உருவெடுக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ள சூழலில், தற்போதே எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து விஜய் தரப்பிற்கு ரகசியத் தூது விடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தத் திடீர் அரசியல் நகர்வு, திமுக முகாமை உற்று நோக்க வைத்திருப்பதோடு, மே 4-ஆம் தேதிக்குப் பிறகு தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய ஆட்சி மாற்றத்திற்கான அச்சாரமாக இது இருக்குமா என்ற விவாதம் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது.
