தமிழகத்தில் நிலவும் அரசியல் குழப்பங்களுக்கு இடையே, ஆளுநர் ஆர்.என்.ரவி ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாகக் கூறி காங்கிரஸ் கட்சியினர் இன்று சென்னையில் ஆவேசப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் மறைமுகமாக வழிவகை செய்வதாகக் குற்றம்சாட்டிய காங்கிரஸ் தொண்டர்கள், ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்றனர்.
#JUSTIN ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினர்
ஆர்ப்பாட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினரிடம் கொடிகளை பறித்து திமுகவினர் தாக்கியதாக புகார்#Congress #DMK #Protest #Governor #Tamilnadu #Election2026 #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/LlsB56eINu
— News18 Tamil Nadu (@News18TamilNadu) May 8, 2026
அப்போது அங்கு வந்த திமுகவினர், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காங்கிரஸ் கட்சியினரின் கைகளில் இருந்த கட்சிக் கொடிகளைப் பிடுங்கி எறிந்துவிட்டு, அவர்களைக் கடுமையாகத் தாக்கியதாகப் புகார் எழுந்துள்ளது.
நீண்டகாலமாகத் தோழமைக் கட்சிகளாக இருந்த திமுக மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் வீதியில் இறங்கி மோதிக்கொண்ட சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய்க்கு ஆதரவு தரும் விவகாரத்தில் காங்கிரஸ் – திமுக இடையே ஏற்கனவே விரிசல் விழுந்துள்ள நிலையில், இந்தத் தாக்குதல் சம்பவம் இரு கட்சிகளுக்கும் இடையிலான மோதலை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.
