தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய வரலாற்றுத் திருப்பமாக, தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) தனது அதிகாரப்பூர்வ ஆதரவைத் தெரிவித்துள்ளது. சென்னை தி.நகரில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு நேரில் சென்ற தவெக நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல்குமார், அக்கட்சியின் ஆதரவுக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார். ஏற்கனவே 108 எம்.எல்.ஏ-க்களுடன் தனிப்பெரும் கட்சியாக உள்ள தவெக-விற்கு, 5 எம்.எல்.ஏ-க்களைக் கொண்ட காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்திருந்த நிலையில், தற்போது சிபிஐ-யின் ஆதரவும் சேர்ந்துள்ளது.
இதன் மூலம் தவெக-விற்கான மொத்த ஆதரவு 114-ஆக உயர்ந்துள்ளது. ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மைக்கு மிக அருகில் தவெக வந்துள்ளதால், தமிழகத்தில் புதிய அரசு அமைப்பதற்கான வேலைகள் மிகத் தீவிரமடைந்துள்ளன. காங்கிரஸைத் தொடர்ந்து இடதுசாரி கட்சிகளும் விஜய்க்கு ஆதரவுக் கரம் நீட்டியிருப்பது, தமிழக அரசியலில் புதிய சகாப்தம் தொடங்கியுள்ளதையே காட்டுகிறது. இந்த அதிரடி மாற்றத்தால், தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக விஜய் பதவியேற்கும் தருணம் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
