இன்று தமிழக அரசியல் பணக்காரர்களுடைய கையில் சென்று விட்டதாக பண்ருட்டி ராமச்சந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார். இது தொடர்பாக நேற்று கடலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், இந்தியாவில் இன்று அதானி மற்றும் அம்பானி போன்ற ஒரு சில குடும்பங்கள் நல்லாத்தான் இருக்கு. ஆனா ஒரு குடும்பம் வாழ்வதற்கு ஒன்பது குடும்பம் இன்னைக்கு கஷ்டப்பட வேண்டிய சூழல்தான் நிலவிக் கொண்டிருக்கிறது.
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்து எந்த ஒரு பயனும் கிடையாது. பாஜகவில் இன்னைக்கு அண்ணாமலைக்கே வேலை இல்லாம போயிடுச்சு. அந்த வேலைய தான் இன்னைக்கு கவர்னர் பார்த்துட்டு இருக்காரு. இன்று பணக்காரர்களுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்பு ஏழையாக இருந்தாலும் திறமை இருந்தும் கிடைப்பதில்லை. இந்த அரசாங்கம் அனைத்து தரப்பினருக்கும் பொதுவாக இருக்க வேண்டும். பரந்தூர் விமான நிலையத்திற்காக அந்த நிலத்தை எடுத்து விட்டால் அங்கிருக்கும் மக்கள் எங்கு செல்வார்கள்.
அவர்களுக்கு ஒரு சரியான மாற்று ஏற்பாட்டை செய்து விட்டு அதன் பிறகு நிலத்தை எடுத்துக் கொள்ளுங்கள். எல்லா நிலத்தையும் கொஞ்சம் கொஞ்சமா ஒவ்வொரு திட்டத்துக்கும் கொடுத்து விட்டால் அந்த மக்கள் எப்படி சாப்பிடுவாங்க. இப்படிப்பட்ட ஒரு நிலை தான் இன்னைக்கு தமிழகத்தோட வளர்ச்சியாக இருக்கு என்று சொல்ல வேண்டும் என ஆதங்கத்துடன் பேசியுள்ளார்.
