தமிழகத்தில் இன்று காலை முதல் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. காலை முதலே தமிழக வெற்றிக் கழகம் பல தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறது. திராவிட கட்சிகளுக்கு சவால் விடும் வகையில் தொடர்ந்து தமிழக வெற்றி கழகம் முன்னிலையில் இருப்பதால் தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று காலை திருத்தணிக்கு சென்று முருகனை வழிபட்ட நடிகர் விஜயின் தந்தை எஸ் ஏ சந்திரசேகரன் வீட்டிற்கு திரும்ப நிலையில் அவருக்கு உற்சாக வரவேற்பு உறவினர்களால் வழங்கப்பட்டது. மேலும் இந்த நிலையில் தற்போது நடிகர் விஜயின் குடும்பத்தினர் விசில் அடித்து அவர்களது மகிழ்ச்சியை கொண்டாடிய நிலையில் அது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
View this post on Instagram
