
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது இந்த நிலையில் ரேஷன் கடைகளில் ஊழியர்களுக்கு அவ்வப்போது விடுமுறைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் இன்று ஜூலை 20 விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மகளிர் உரிமைத்தொகை பணிக்காக கடந்த ஆண்டு ஜூலை 23 மற்றும் ஆகஸ்ட் 4 ஆகிய விடுமுறை நாட்களில் ரேஷன் கடைகள் இயங்கியது. இரண்டு நாட்கள் பணிக்காலத்தை ஈடு செய்யும் வகையில் கடந்த ஜூன் 15ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் இன்று ஜூலை 20ஆம் தேதி ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.