இந்தியாவில் அண்டை மாநிலங்களுக்கு தமிழகத்தில் இருந்து விதிகளுக்கு புறம்பாக கனிமங்களை எடுத்துச் செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து அதிகாரிகளுக்கும் அமைச்சர் துரைமுருகன் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். தமிழகத்திலிருந்து விதிகளுக்கு புறம்பாக அண்டை மாநிலங்களுக்கு கனிமங்கள் எடுத்துச் செல்லப்படுவதாக புகார் எழுந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல் சுரங்கங்கள் மற்றும் குவாரிகள் வைத்துள்ள நிலுவைத் தொகையை வசூல் செய்ய தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். சுரங்கங்கள் மற்றும் குவாரிகளில் விதிமீறல்களை ஆய்வு செய்து அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்று அவர் உத்தரவிட்டு உள்ளார்.