தமிழகம் முழுவதும் இன்று 1000 இடங்களில் டெங்கு உள்ளிட்ட மழைக்கால நோய்களுக்காக இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் மழைக்கால நோய்கள் குறித்த பரிசோதனைகள், மருத்துவ சிகிச்சை உதவிகள் வழங்கப்படும். தற்போது வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த மருத்துவ முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இலவச மருத்துவ முகாம் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் நடைபெறவுள்ளது