தமிழக அரசானது மக்களுடைய நலனை க்கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செய்லபடுத்தி வருகிறது. இதனால் ஏழை, எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர். குறிப்பாக பெண்கள் நலனில் அக்கறை கொண்டு அவர்களுக்கு பல சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு, ரத்த சோகை உள்ள தாய்மார்களுக்கு 5000 நிதியுதவி வழங்கப்படுவதாக அமைச்சர் மா.சு. அறிவித்துள்ளார்.

இத்திட்டத்தில் முதல் தவணையாக 4-5 மாதம் கர்ப்பம் தரித்த தாய்மார்களுக்கு ச1000, 2வது தவணையாக 5-6 மாதம் 1000, 3ம் தவணையாக 9 மாதம் 1000 தரப்படும். குழந்தை பிறந்து 6வது மாதம் 500 மற்றும் 12, 18, 24வது மாதம் 500 என மொத்தம் ஒவ்வொரு பயனாளிகளுக்கும் 5000 வழங்கப்படுகிறது.