
கடந்த சில நாட்களாக கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு வரும் அரிசியின் வரத்து குறைந்துள்ளது. இதற்கு காரணம் இரண்டு மாநிலங்களிலும் நெல் உற்பத்தி குறைந்துள்ளது என கூறப்படுகிறது. இதனால் தமிழகத்திற்கு வரும் 26 கிலோ மூட்டை அரிசியின் விலை 120 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதனைத் தவிர சில்லரை விற்பனையில் ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய் முதல் ஐந்து ரூபாய் வரை திடீரென உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் மூட்டைக்கு 300 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதனைப் போலவே அரிசி விலைக்கு இணையாக சமையலில் அன்றாடம் பயன்படுத்தப்படும் துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, உளுந்து மற்றும் சீரகம் போன்றவற்றின் விலையும் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.