தமிழகத்தில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 10 முதல் 20 கணினிகள் மற்றும் ப்ரொஜெக்டர்கள் உள்ளது. அவற்றுக்கு ஒருங்கிணைந்த பிராட் பேண்ட் சேவை அளிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இணையத்தின் வேகம் மிகவும் குறைவாக உள்ளதால் பள்ளிகளில் இந்த ஆய்வகங்களின் பயன்பாடு குறைந்துள்ளது. இதனால் ஒவ்வொரு பள்ளிகளும் தங்களுக்கு தனித்தனியாக அதிக வேகம் கொண்ட பிராட்பேண்ட் இணைப்பை அதிகபட்சம் 1500 கட்டணத்திற்குள் நிறுவிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தொகையை பள்ளி மேலாண்மை குழுவுக்கு அனுப்ப வேண்டும் எனவும் பிராட்பேண்ட் இணைப்புக்கான நிறுவுதல் கட்டணத்தை பள்ளிக்கு வழங்கப்படும் மானிய தொகையிலிருந்து செலுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.