தேமுதிக தலைவர் விஜயகாந்த்க்கு தேவை ஏற்படும் போது செயற்கை சுவாசம் அளிக்கப்படும் என்று தகவல் வெளியாகி  உள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சனிக்கிழமை இரவு சுமார் 7.45 மணியளவில் சென்னை மியாட் தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். உள் நோயாளியாக அனுமதிக்கப்படுவதற்கு முன்னதாக பல்வேறு கட்ட பரிசோதனைகள்  நடத்தி முடிக்கப்பட்டு இருந்த நிலையில்,  மருத்துவர்கள் உடைய ஆலோசனைப்படி,  பரிந்துரைப்படி அவர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு தொடர் மருத்துவ சிகிச்சையானது அளிக்கப்பட்டு வருகிறது.

அவருக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய மார்பு சளி காரணமாக இடைவிடாது இருமல் மற்றும் அதன் காரணமாக ஏற்படக்கூடிய தொல்லையினாலே அவர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனை,  சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றது என மருத்துவர் தெரிவித்தனர்.உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த் 6ஆவது நாளாக மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கக்கூடிய நிலையில்,  தொடர்ந்து அவருடைய உடல்நிலை சிராக இருப்பதாகவும்,  உடல் நலம் தேறி  வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கின்றது.

தொடர்ந்து அவருடைய உடல் நிலையில் முன்னேற்றம் இருக்கக்கூடிய நிலையில்,  என்னென்ன வித விதமான மருத்துவ சிகிச்சைகள் மேலும் அளிக்கப்பட வேண்டும் என்பதெல்லாம் மருத்துவ குழுவானது தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.  தேவை ஏற்படும் போது செயற்கை சுவாசம் அளிக்கப்படும் எனவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.