திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியில் பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த எட்டு வயது சிறுமியை அதாவது நான்காம் வகுப்பு படிக்கும் மாணவியை ஒருவர் பின்னால் சென்று கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்தார்.

இது தொடர்பான சிசிடிவி வீடியோ வெளியாகி தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் குழந்தையின் தாய் அந்த நபரை தூக்கில் போட வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார். இந்நிலையில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு நீண்ட நாட்கள் ஆகியும் இதுவரை குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை.

இவரின் புதிய போட்டோவை சமீபத்தில் காவல்துறை வெளியிட்ட நிலையில் தற்போது இவரை பற்றி தகவல் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். அதன்படி இவரைப் பற்றி தகவல் தெரிந்தால் 9952060948 என்ற நம்பரை தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.