விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு நெல்லை மாவட்டத்தில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட தம்பி கவின் அவர்களின் அம்மா மற்றும் தம்பி ஆகியோர் இன்று அம்பேத்கர் திடலில் சந்தித்தனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொடர் முன்முயற்சியினால் கவினின் தம்பி பிரவீனுக்கு சிப்காட்டில் உதவி மேலாளராக அரசு வேலை கிடைத்திருக்கிறது.
வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டதன் அடிப்படையில் முதன் முதலாக உதவி மேலாளர் பதவி கிடைத்திருப்பது இதுதான் முதல் முறை! அரசு வேலைக்கான நியமன ஆணையை என்னிடம் காண்பித்து தம்பி கவினின் குடும்பத்தினர் நன்றி கூறினர் என்று பதிவிட்டுள்ளார். மேலும் நெல்லையில் காதல் விவகாரத்தில் கவின் ஆணவ படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
கடந்த ஆண்டு நெல்லை மாவட்டத்தில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட தம்பி கவின் அவர்களின் அம்மா மற்றும் தம்பி ஆகியோர் இன்று அம்பேத்கர் திடலில் சந்தித்தனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொடர் முன்முயற்சியினால் கவினின் தம்பி பிரவீனுக்கு சிப்காட்டில் உதவி மேலாளராக அரசு வேலை… pic.twitter.com/fE8Gq0GycJ— Thol. Thirumavalavan (@thirumaofficial) May 24, 2026
