வருவாய்த் துறை சார்பில், சமூக பாதுகாப்புத் திட்டங்கள் மூலம் முதியோர், விதவை,முதிர்கன்னிகள், கணவரால் கைவிடப்பட்டோர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் மாநிலம் முழுவதும் 30.55 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர்.

ரூ.1000 ஆக இருந்த உதவி தொகையை கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1500, மற்றவர்களுக்கு ரூ.1200 ஆக உயர்த்தி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அறிவித்த மாதம் முதல் கடந்த 7 மாதங்களாக உதவித்தொகை கிடைக்கவில்லை என பயனாளிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.