தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் ஆறு மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தேனி, மதுரை, விருதுநகர் , தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும். மற்ற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது