செய்தியாளரிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  நீட்டுக்கு விலக்கு கேட்டு பல கையெழுத்து இயக்கம் நடந்துள்ளது. அதனால் என்ன பயன் என்று உங்களுக்கு தெரியும் ? இதிலே நீங்க ஆழ்ந்து கவனிக்கணும். இதுல கையெழுத்து வாங்கி யாருக்கு அனுப்புவாங்கன்னு நினைக்கிறீங்க. கையெழுத்து வாங்கி யாருக்கு  கொடுப்பாங்கன்னு நினைக்கிறீங்க. நீட் இப்போ மட்டும் இல்ல ரொம்ப நாளா இருக்குல்ல…

அதுக்கு முன்னாடி எல்லாம் இந்த முயற்சி எடுக்காம,  இரண்டு மாதத்தில் தேர்தல் அறிவிக்க போறாங்க.. அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு போக போகுது. நீங்க பாக்குறீங்க ? தேர்தல் தேதியை  ஜனவரியில் அறிவிச்சுருவாங்க. எல்லாம் கட்சியும் கூட்டணி பேசிட்டு இருக்காங்க. தமிழ்நாடு தேர்தல் ஆணையம் இதுகுறித்து விவாதிக்க எல்லா கட்சியும் வர சொல்லி இருக்காங்க.

இப்போ போய் கையெழுத்து இயக்கம் நடத்துறேன்னு அது எப்படி ? ரெண்டரை  வருஷம் என்ன பண்ணுறீங்க ? என்ன பயன் ? இது மாதிரி பல கையெழுத்து இயக்கம் நடந்துருக்கு. நீங்க காங்கிரஸ்ஸை  கூட வச்சிருக்கீங்க. காங்கிரஸ் தான் இந்த நீட் தேர்வு கொண்டு வந்தது.நீங்க அப்போ கூட இருந்து கையெழுத்து போட்டு ஆதரிச்சீங்க. இப்போ தீடீரென்னு உங்களுக்கு

இந்த நீட் தேர்வு மேல வெறுப்பு வருது.  அப்போ போன ஆண்டு இந்த  கையெழுத்து இயக்கத்தை பண்ணல ? போன ஆண்டு போராட்டம் செய்யல ? அப்ப தேர்தல் வரும் போது மட்டும் தான் எங்க மக்கள் மேல… எங்க பிள்ளைகள் மேல… உங்களுக்கு அன்பு, அக்கறை, பாசம் எல்லாம் வருமா ?

இந்த நீட் தேர்வு வேணும்னு உச்சநீதிமன்றத்தில் வாதிட்டு  வென்றது யாரு ? அம்மா நளினி சிதம்பரம் தானே…  அவங்க எந்த கட்சியில் இருக்காங்க….  இதே ஐயா கார்த்திக் சிதம்பரம் அவர்கள்  நீட் தேர்வு வேணும்னு பேசினது இருக்கா ? இல்லையா ? சொல்லுங்க என தெரிவித்தார்.