தமிழகத்தில் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள 11 பொறியியல் கல்லூரிகளை மூடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்தில் 10 சதவீதத்திற்கும் குறைவான மாணவர் சேர்க்கை உள்ள கல்லூரிகளுக்கு நடப்பு ஆண்டில் அனுமதி அளிக்காமல் இருக்க தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

ஆனால் அதற்கு சிண்டிகேட் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படாமல் ஐந்து சதவீதத்திற்கும் கீழ் மாணவர் சேர்க்கை இருந்த 11 பொறியியல் கல்லூரிகளை மூட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த கல்லூரிகளில் ஏற்கனவே படித்து வரும் மாணவர்களை வேறு கல்லூரியில் சேர்க்கவும் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது. மேலும் 429 பொறியியல் கல்லூரிகளில் கூடுதலாக 25,000 இடங்கள் உருவாக்க கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.