
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு திறனறி தேர்வு நடத்தப்பட்டு வரும் நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு பயின்று வரும் தமிழ் வழி, ஆங்கில வழி மற்றும் சிபிஎஸ்இ மாணவர்கள் அனைவருக்கும் ஏ கே டி பள்ளியில் நாளை திறனறித் தேர்வு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் கல்வி அறிவை ஊக்குவிப்பதற்காக நடத்தப்படும் இந்தத் தேர்வு ஆன்லைன் மற்றும் நேரடி மூலமாக நடத்தப்படுகின்றது.
ஆன்லைன் தேர்வு எழுதும் நபர்கள் தங்களுடைய தேர்வு நேரத்தை தாங்களாகவே தேர்வு செய்து கொள்ளலாம். நேரடியாக தேர்வு எழுதக்கூடிய மாணவர்கள் பள்ளி வளாகத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். கள்ளக்குறிச்சி மாவட்டம் ஏ கே டி பள்ளியில் தேர்வு நடைபெற உள்ள நிலையில் தேர்வில் கலந்து கொள்வதற்கு முன்பாக 6369146590 என்ற மொபைல் எண் மற்றும் www.aktinstitutions.com என்ற இணையதளத்தில் தங்களுடைய பெயரை மாணவர்கள் முன்பதிவு செய்ய வேண்டும்.
இந்த தேர்வுகள் பிப்ரவரி 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. 10ம் வகுப்பு பாடத்தில் இருந்து மொத்தம் 50 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்படும் எனவும் முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவர்கள் ஸ்மார்ட் வாட்ச் பரிசாக பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.