டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசனிடம் தமிழகத்தில் அதிமுகவை தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைப்பதற்கான முயற்சியை எடுக்கும்படி பல விஷயங்களை பேசி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  இதனடிப்படையிலேயே ஜி.கே வாசன் எடப்பாடி பழனிச்சாமியை  சந்தித்ததாகவும் கூறப்படுகிறது.  தற்போது தமிழக அரசியலில் இது பேசு பொருளாகி உள்ளது.

அதிமுகவை நாடாளுமன்ற தேர்தலுக்கு தங்களுடைய கூட்டணிக்குள் கொண்டுவதற்கான ஒரு முயற்சியாக தான் இதனை பார்க்க வேண்டி இருக்கிறது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினுடைய தலைவர் ஜிகே வாசன் மூலம் பாஜக ஒரு முயற்சியை தொடங்கி இருப்பதை தான் இதன் மூலமாக புரிந்து கொள்ள முடிகிறது. அதிமுகவை பொறுத்தவரைக்கும் பாஜக கூட்டணியிலிருந்து வெளியே வந்த பிறகு யாருமே அதிமுகவை கடுமையான வார்த்தைகளால் விமர்சிக்கவில்லை.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பொருத்தவரைக்கும் கூட்டணிக்கு பிறகும் ஆகட்டும்,  அதற்கு முன்பாகட்டும் பல்வேறு விதமான விமர்சனங்களை முன்வைத்தாலும் கூட,  பாஜகவினுடைய தேசிய தலைவர்கள் ஆகட்டும்,  பிற மாநில தலைவர்களாகட்டும் யாருமே அதிமுக மீதான விமர்சனங்களை முன்வைக்கவில்லை. அவர்கள் விரும்புவது என்னவென்றால் அதிமுக – பாஜகவுடன் கூட்டணி தொடர வேண்டும்.

நாடாளுமன்ற தேர்தலில் இந்த இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைத்து, திமுக கூட்டணியை எதிர்க்க வேண்டும்…. எதிர்கொள்ள வேண்டும் என்பதுதான் அவர்களை விருப்பமாக இருக்கின்றது. தற்போது நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி இருக்கக்கூடிய சூழலில் திமுக வலுவான  கூட்டணி அமைத்து போட்டியிடப்படுகிறது. திமுக கூட்டணி எதிர்க்க வேண்டும் என்றால் அதிமுக பாஜக இணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான் பாஜக உடைய விருப்பமாக புரிந்து கொள்ள முடிகிறது.

அந்த அடிப்படையில் தான் பாஜக ஜி கே வாசன் மூலமாக இந்த முயற்சியை எடுக்கிறதோ என்ற கேள்வி எழுகின்றது. ஆனால் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் பாஜக உடைய விருப்பத்தை  தெரிவித்ததாக தெரிவிக்கின்றார்கள். ஆனால் அதனை திட்டவட்டமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மறுத்திருக்கிறார். ஜி.கே  வாசன் முயற்சி மேற்கொண்டாலும்,  அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அதனை திட்டவட்டமாக மறுத்து இருக்கிறார் .