நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை நேற்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து அரசியல் பிரபலங்கள் பலரும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் விஜய் எங்களுக்கு அருமையான அண்ணன் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இந்த செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், நடிகர் விஜய்யை பொருத்தவரைக்கும் உதயநிதி ஸ்டாலின் மூலம் எனக்கு கிடைத்த அருமையான அண்ணன். நேரடியாக பேசும் போது அன்பொழுக பேசக்கூடியவர். உதயநிதி ஸ்டாலின் தெரிவித்ததை போல நானும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் கொள்கைகள் வரும்போது கட்சியை நோக்கம் தெரியவரும் என்றும் கூறியுள்ளார்.