போக்குவரத்து துறையில் 2012-ம் ஆண்டுக்கு பிறகு வரிகள் உயர்த்தப்படவில்லை. எனவே,வரி விதிப்பு முறைகளில் திருத்தம்செய்ய அரசு முடிவு எடுத்துள்ளது. இதன்படி, அனைத்து வகை வாகனங்களுக்கும் புதிய வரி நிர்ணயிக்கப்படுகிறது என சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி வாகனங்களுக்கான வரி உயர்வை நவ. 1ம் தேதி முதல் நடைமுறைப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

சுற்றுலா மற்றும் ஒப்பந்த வாகனங்களுக்கு காலாண்டு வரி ரூ.4,900, படுக்கை வசதி கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.3,000-ரூ.4,000 வரையிலும் வரி உயர்கிறது. புதிய பைக்குகளுக்கு வாழ்நாள் வரி, ரூ.1 லட்சம் வரை 10%, ரூ. 1 லட்சத்துக்கு மேல் இருந்தால் 12% என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.