தமிழகத்தில் பொதுவாகவே பண்டிகை நாட்களில் மதுபான கடைகளில் அதிக அளவு விற்பனை நடைபெறும். தமிழக அரசுக்கு நிதி வருவாயை ஈட்டி தருவதில் மிக முக்கிய பங்கு வகிப்பது டாஸ்மாக் கடைகள் தான். அதிலும் குறிப்பாக தீபாவளி மற்றும் பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் மட்டும் பல நூறு கோடிகள் வருமானம் காரணமாக அரசுக்கு பெரும் நிதி வருவாயை அள்ளிக் கொடுக்கிறது.

இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் மூன்று நாள் மது விற்பனை 850 கோடியை தாண்டியதாக தகவல் வெளியாகி உள்ளது. முக்கிய பண்டிகைகளின் போது டாஸ்மாக் விற்பனை அதிகரிப்பது வழக்கம். அவ்வகையில் போகி பண்டிகையான ஜனவரி 14ஆம் தேதி 250 கோடி, பொங்கல் தினத்தன்று 350 கோடி,காணும் பொங்கல் அன்று 250 கோடி என மொத்தம் 850 கோடிக்கு மேல் விற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.