தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் முடிவடைந்து தற்போது கோடை விடுமுறை தொடங்கியுள்ளது. அதே சமயம் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது. இந்நிலையில் நிகழாண்டு அனைத்து வகை பள்ளிகளுக்குமான வேலை நாள் வெள்ளிக்கிழமையுடன் நிறைவு பெறும் நிலையில் இறுதி நாளில் எஞ்சியுள்ள தேர்வு மட்டும் மாணவர்களுக்கு நடத்தப்பட உள்ளது.

கோடை விடுமுறை நாளை தொடங்கும் நிலையில் சுமார் ஒரு மாதம் விடுப்பு முடிந்து பள்ளிகள் ஜூன் முதல் வாரம் திறக்கப்படும். தற்போது சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசனை நடைபெறுகிறது.