திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே மாவடி புதூர் பகுதியில் மோகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 54 வயதாகும் நிலையில் களக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் அந்த பள்ளியில் படிக்கும் ஒரு எட்டாம் வகுப்பு மாணவியை தன் அறைக்கு தனியாக வருமாறு அழைத்துள்ளார். அங்கு வந்த மாணவிக்கு மோகன் பாலியல் தொல்லை கொடுத்த நிலையில் உடனடியாக மாணவி வெளியே ஓடி வந்தார். பின்னர் வீட்டுக்கு சென்றதும் தன் பெற்றோரிடம் நடந்த சம்பவங்களை கூறி மாணவி கதறி அழுதார்.

இது தொடர்பாக நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மோகனை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தமிழகத்தில் சமீப காலமாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்த செய்திகள் அடிக்கடி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தும் நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்களே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது பேரதிர்ச்சியாக இருக்கிறது. இந்த நிலையில் தற்போது மீண்டும் பாலியல் வழக்கில் ஒரு ஆசிரியர் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.