கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவேரிப்பட்டணம் கிராமம் அருகே உள்ள பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி செல்வம் (35). இவர் தற்காலிக ஆசிரியராக கிருஷ்ணகிரி அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில் பள்ளியில் பயிலும் இரண்டு மாணவிகள் தலைமை ஆசிரியரிடம் ஆசிரியர் செல்வம் தங்களிடம் தவறாக நடந்து கொள்வதாக புகார் அளித்துள்ளனர்.

அந்தப் புகாரின் பேரில் தலைமை ஆசிரியர் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ஆசிரியர் செல்வம் குறித்து பள்ளியில் விசாரணை நடத்தியுள்ளனர்.

அந்த விசாரணையில் மாணவிகள் சிலர் ஆசிரியர் மீது புகார் அளித்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல்துறையினர் ஆசிரியர் செல்வத்தை கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.