கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வந்த சுரேஷ்குமார், கடந்த மார்ச் மாதம் 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. பாதிக்கப்பட்ட மாணவி, பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து, மாவட்ட கல்வி அதிகாரிகள் மாணவியிடம் நேரில் விசாரணை நடத்தினர்.
இதேவேளை, ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. விசாரணை முடிவில், குற்றச்சாட்டின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, சுரேஷ்குமாரை பணியிடை நீக்க முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்டார்.
