தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு தற்போது பொது தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. இந்த தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியாகும் என அரசு அறிவித்துள்ள நிலையில் பொதுத்தேர்வில் தோல்வியடையும் மாணவர்களுக்கு உடனே துணை தேர்வு நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நடப்பாண்டு தேர்வில் தோல்வியடையும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு கட்டண சலுகை வழங்கப்பட்டுள்ளது.

பொதுவாக துணைத் தேர்வு எழுதுவதற்கு ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் ஆனால் தற்போது உடனடி தேர்வுக்கு தட்கல் திட்டத்தில் விண்ணப்பித்தால் சிறப்பு கட்டணம் ஆயிரம் ரூபாய் கிடையாது என்று அரசு அறிவித்துள்ளது. மேலும் துணை தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஏழு நாட்களில் இருந்து 15 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.