தமிழகத்தில் மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளத்தால் சேதமான அரசு சான்றிதழ்கள், பள்ளி மற்றும் கல்லூரி சான்றிதழ்களை கட்டணமில்லாமல் வழங்க சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி காஞ்சி, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 11ஆம் தேதியும் சென்னையில் டிசம்பர் 12ஆம் தேதியும் சிறப்பு முகாம்கள் தொடங்கப்படும். இந்த முகாம்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.