தமிழகத்தில் முக்கிய பண்டிகை நாட்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சில தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவது வழக்கம். அதன்படி சேலம் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் நாளை ஞாயிற்றுக்கிழமை வள்ளலார் தினத்தை முன்னிட்டு இறைச்சி கூடங்கள் மற்றும் இறைச்சி கடைகள் செயல்படாது. எனவே இறைச்சிக்கடை உரிமையாளர்கள் தாங்கள் நடத்தும் இறைச்சி கூடங்கள் மற்றும் இறைச்சி கடைகளை முழுமையான அளவில் மூட வேண்டும் என்றும் மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.