தமிழகத்தில் கொரோனா காலத்தில் மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தும் வகையில் இல்லம் தேடி கல்வித் திட்டம் தொடங்கப்பட்டது. இதில் தற்காலிகமாக பல ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் பணி முடிந்து திரும்பும் வரை தற்காலிக ஆசிரியரை நியமிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தற்போது உத்தரவிட்டுள்ளது.

ஜனவரி முதல் ஏப்ரல் வரை நான்கு மாதங்கள் பணியாற்ற தற்காலிக ஆசிரியர்களை ஜனவரி ஒன்பதாம் தேதிக்குள் நியமிக்க வேண்டும். தற்காலிகமாக நிரப்பப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் 7500 ரூபாய் சம்பளம், பட்டதாரி ஆசிரியர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் மதிப்பூதியம் வழங்க வேண்டும் எனவும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.