தமிழகத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டுக்கான சாலை விபத்து குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் சென்னை மற்றும் கோவையில் 3 ஆயிரத்து 642 விபத்துக்கள் நடந்துள்ள நிலையில் கோவையில் 1040 பேரும், சென்னையில் 504 பேரும் உயிரிழந்துள்ளனர். சேலத்தில் 3174 விபத்துகளில் 787 பேரும் , மதுரையில் 2642 விபத்துகளில் 876 பேரும் உயிரிழந்துள்ளனர்.

மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் 2590 விபத்துகளில் 716 பேரும், விழுப்புரத்தில் 2585 விபத்துகளில் 548 பேரும் , திருச்சியில் 2416 விபத்துகளில் 720 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் சராசரியாக 2023 ஆம் ஆண்டில் நடைபெற்ற 66 ஆயிரத்து 841 விபத்துகளில் 18,074 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது