
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது. கோடை காலம் தொடங்கும் நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் என்றே வானிலை ஆய்வு மையமும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்று தமிழ்நாட்டில் மொத்தம் 10 இடங்களில் வெயில் 100 டிகிரிக்கும் அதிகமாக இருந்துள்ளது. அதன்படி வேலூரில் அதிகபட்சமாக 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
அதன் பிறகு ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் 101.12 டிகிரி பாரன்ஹீட்டும், திருப்பத்தூர் மற்றும் கரூர் பரமத்தியில் 102.2 டிகிரி பாரன்ஹீட்டும் வெப்பம் பதிவாகியுள்ளது. இதைத்தொடர்ந்து திருச்சியில் 100.22 டிகிரியும், திருத்தணியில் 100.4 டிகிரியும், தர்மபுரி மற்றும் மதுரையில் 100 டிகிரியும், சென்னை மீனம்பாக்கத்தில் 101.6 டிகிரியும் வெப்பம் பதிவாகியுள்ளது. மேலும் தொடர்ந்து வெப்பநிலை என்பது அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர்.