தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் மழை பெய்து வரும் நிலையில் இன்று 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், நாகை, திருவாரூர், அரியலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.