தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டு இருந்த சூழலில் தற்போது வெப்பத்தின் தாக்கம் குறைந்துள்ளது. அதேசமயம் ஒரு சில நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி கோவை , நீலகிரி, திண்டுக்கல், தேனி, திருப்பூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர் மற்றும் தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.