தமிழக அரசானது மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் ஏழை,எளிய மக்களும் பயனடைந்து வருகின்றனர். அந்தவகையில் தற்போது மீன்பிடித் தடைக்காலத்தை ஒட்டி, 14 கடலோர மாவட்டங்களை சேர்ந்த மீனவ குடும்பங்களுக்கு தமிழக அரசு 5,000 நிவாரணம் அறிவித்துள்ளது.

அதன்படி, 1.79 லட்சம் குடும்பங்களுக்கு தலா 5,000 வீதம், 389.50 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு நிவாரணத்தொகை ஒதுக்கியதை அடுத்து, மீன்பிடி தடைக்கால நிவாரணத்தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கும் பணி இன்று தொடங்குகிறது.