தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் இன்று முதல் ஜூன் 27ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்யும். மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல், வடக்கு ஆந்திர கடலோர பகுதிகள், மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்பதால் அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.